ஒரே மாதத்தில் ஒரே மாவட்டத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்..விசாரணைக்கு உத்தரவு!
20 heart attack deaths in a single district in a single month Inquiry ordered
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்த மாவட்ட மக்களை கவலையடைய செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு அம் மாநில முதலமைச்சர்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில முதல்வர் சித்தராமையா,ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக முழுமையான மருத்துவ ஆய்வை மேற்கொள்ள நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயதேவா இருதய அறிவியல் நிறுவன இயக்குநர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.10 நாட்களில் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே குழு, பிப்ரவரியிலேயே கோவிட் தடுப்பூசி விளைவுகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டது.மேலும்
"நெஞ்சுவலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனையை அணுகுங்கள். இதுபோன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்."
சமீபத்திய சில உலகளாவிய ஆய்வுகள், கோவிட் தடுப்பூசி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளன என்று சித்தராமையா கூறினார்.மேலும் "மாரடைப்புகளைக் கூட அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்தும் பாஜக தலைவர்கள் அறியாமையால் பேசுகிறார்கள். கோவிட் தடுப்பூசியை அவசரமாக கொண்டு வந்ததற்குப் பாஜக அரசே பொறுப்பு."மக்களின் உயிரைப் பாதுகாப்பதே அரசு குறிக்கோள் எனவும், உண்மையான காரணத்தை கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
English Summary
20 heart attack deaths in a single district in a single month Inquiry ordered