20½ கிலோ கஞ்சா பதுக்கல்...! புதுச்சேரி இளைஞரை கைது செய்து காவல்துறை தீவிர விசாரணை...!
20 and half kg ganja hoarding Puducherry youth arrested and police investigating intensively
ஈரோடு மாவட்டம் பவானி ரிங்ரோடு ஆற்றங்கரை பகுதியில், விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து காவலர்கள் மேற்கொண்ட தீவிர சோதனையில், ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பவானி ரிங்ரோடு ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அப்பகுதி முழுவதும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு நின்றிருந்த புதுச்சேரியைச் சேர்ந்த பல்லா வெங்கட் சிவராம் என்பவரை காவலர்கள் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மொத்த விலையில் கஞ்சாவை வாங்கி வந்து ஆற்றங்கரை பகுதியில் ரகசியமாக பதுக்கி வைத்து, பின்னர் விற்பனை செய்து வந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து பல்லா வெங்கட் சிவராமை கைது செய்த காவலர்கள், அவரிடம் இருந்து 20½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார், இதன் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, விற்பனை வலையமைப்பில் மேலும் நபர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
20 and half kg ganja hoarding Puducherry youth arrested and police investigating intensively