ரகசியம் உடைந்தது...! 'பாஜகவுடன் திமுக கை கோர்த்துவிட்டது'...! - ஆதாரங்களுடன் பகிரங்க குற்றச்சாட்டை வீசிய அமைச்சர் நிர்மல்குமார்...! - Seithipunal
Seithipunal


தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், திமுக-பாஜக இடையிலான அரசியல் உறவு குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.அவர் கூறியதாவது,"தற்போது திமுக, பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைத்திருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. அரசியலில் நிரந்தர எதிரி என்று யாரும் இல்லை என கனிமொழி சோமுவும், வானதி சீனிவாசனும் கூறியுள்ளனர்.

திருச்சி சிவா மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது என வெளியான தகவலுக்கும் திமுக தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.டெல்லியில் யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அது மக்களின் நலனுக்காகவே இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம் என்று திமுக இதுவரை ஒரு வார்த்தைகூட தெரிவிக்கவில்லை. இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளை பார்க்கும்போது, திமுகவும் பாஜகவும் நேரடி கூட்டணியில் இருப்பது உறுதியாகிறது.

இருக்கை மாற்றம் தொடர்பாக நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றதாக கனிமொழி கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது விளக்கம் நம்பும்படியாக இல்லை.காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

காவிரி நதி நீர் உரிமையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு இடப்பற்றாக்குறைதான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

secret broken DMK joined hands BJP Minister Nirmal Kumar made public accusation evidence


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->