வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...! - தஞ்சை அருகே 33 வயது வாலிபர் கைது...!
17 year old girl who alone at home harassment 33 year old youth arrested near Thanjavur
தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 33 வயது வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செங்கிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது ஆச்சாம்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த முருகேசனின் மகன் மணிகண்டன் (33), சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அச்சத்தில் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டதும் மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தரப்பில் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மணிகண்டனை காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
17 year old girl who alone at home harassment 33 year old youth arrested near Thanjavur