பழநி இடும்பன் கோவிலில் பரபரப்பு; 17 பவுன் தங்க நகைகள், வெள்ளி வேல் மாயம்..!
17 sovereigns of gold jewelry and a silver Vel stolen from the Idumban Temple in Palani
பழநி அடுத்த சிவகிரிப்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான இடும்பன் கோயில் அமைந்துள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் தங்கள் வழிபாடு மற்றும் பிரார்த்தனையை இடும்பன் கோயிலில் இருந்து தொடங்குகின்றனர். இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கோயில் பதிவேடுகள், சுவாமி நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, 17 பவுன் தங்க நகைகள், 52 கிராம் வெள்ளி வேல் ஒன்றும் மாயமாகியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியும், தேடிப் பார்த்தும் நகைகள் கிடைக்காததால் அறநிலையத்துறை அதிகாரிகள் வேறு வழியின்றி மே 30-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, பழநி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோயில் நகைகள் காணாமல் போன விவகாரம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் வெளியில் சொல்லாத போதிலும், பக்தர்களுக்கு தெரிய வந்தததால் பரபரப்பு நிலவியது. கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தெரியாமல் நகைகள் திருடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என பக்தர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த திருட்டு விவகாரம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் வாய்த்திறக்க மறுக்கின்றனர்.
English Summary
17 sovereigns of gold jewelry and a silver Vel stolen from the Idumban Temple in Palani