காலை உணவில் பல்லி.!! வாந்தி.. மயக்கம்.. 13 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிகிச்சை.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கங்காபுரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழும் கிடந்ததால் 13 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கம் போல இன்று பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதில் பல்லி விழுந்து இறந்து கிடந்தை சமையலர் கவனிக்காமல் சமைத்து மாணவர்களுக்கு பரிமாறியுள்ளார்.

இந்த உணவை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் உண்ட நிலையில் ஒரு மாணவர் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார்.

இதனால் பதறிப் போன ஆசிரியர்களும் பெற்றோரகளும் பெரிய கொழும்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக 13 குழந்தைகளையும் அனுமதித்தனர். பல்லி விழுந்த உணவு உண்ட ஒரு குழந்தைக்கு மட்டுமே வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் மற்ற 12 குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 students got treatment for ate lizard spilled food


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->