தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 1.25 டன் பீடி இலைகள் பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் கடல்பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடிஇலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தடுப்பதற்காக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் மற்றும் கியூ பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள தருவைகுளம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அந்தத் தகவலின் படி, கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீஸார் தருவைகுளம் கடற்கரை பகுதிக்கு விரைந்துச் சென்று இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறிய ரக சரக்கு வாகனத்திலிருந்து படகில் பீடி இலை பண்டல்களை சிலர் இறக்கிக் கொண்டிருந்தனர். 

அவர்கள் போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். அதன் பின்னர் போலீசார், சுமார் 1.25 டன் எடை கொண்டுள்ள பீடி இலை பண்டல்கள், சிறிய ரக சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1.25 ton beedi leaf seized in thoothukudi


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->