தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு அருகே கைது!!
12 Tuticorin fishermen arrested near Maldives
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடலோர காவல் படை கைது செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தில் இருந்து மைக்கேல் பாக்யராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் 12 பேர் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறும் மாலத்தையும் கடலோர காவல்படை கைது செய்துள்ளது.

ஏற்கனவே ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையும், இலங்கை கடற்கொள்ளையர்களும் அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது மாலத்தீவு கடலோர காவல் படையினர் தூத்துக்குடி மீனவர்களை கைது செய்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
12 Tuticorin fishermen arrested near Maldives