மாலத்தீவில் 12 தூத்துக்குடி மீனவர்கள் கைது.!
12 thoothukudi fishermans arrest in Maldives
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பாக்யராஜ் என்பவர் படகில் விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிருஷ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி உள்ளிட்ட பன்னிரண்டு பேர் மீன்பிடிக்க சென்றனர்.
அங்கு அவர்கள் மீன்பிடித்துவிட்டு கடந்த 23-ம் தேதி மாலத்தீவு கடல் பகுதி வழியாக கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர், அத்துமீறி மாலத்தீவு கடல் பகுதியில் நுழைந்ததாக கூறி 12 பேரையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உறவினர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை, மத்திய, மாநில அரசுகள் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள இப்ராஹிம் முகமது சோலி, மாலத்தீவை விட்டு இந்திய ராணுவம் வெளியேறட்டும் என்று வெளிப்படையாக பேட்டியளித்த நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
12 thoothukudi fishermans arrest in Maldives