நிறைவேறாத ஒரு தலை காதல்..12ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!
12 std Student Committed Suicide In Chennai
ஒருதலை காதலால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் வேலுமணி அங்கு உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும் காதல் கைக்கூடி வராததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது.
இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
12 std Student Committed Suicide In Chennai