10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்.!
10th public exam answer sheet valuation start today
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மாதம் 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என்று மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.
தேர்வு தொடங்கிய முதல் நாளான மார்ச் 28-ந் தேதி தமிழ், ஏப்ரல் 2-ந் தேதி ஆங்கிலம், 4-ந் தேதி விருப்ப மொழி, 7-ந் தேதி கணிதம், 11-ந் தேதி அறிவியல் என்று குறிப்பிட்ட இடைவெளியில் தேர்வுகள் நடைபெற்றன.

கடைசி தேர்வான சமூக அறிவியல் கடந்த 15 ஆம் தேதி நடந்து முடிந்தது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்தது. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தமிழக முழுவதும் இன்று தொடங்கப்பட உள்ளது.
தினமும் காலை 9 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை இந்த பணி நடைபெறுகிறது. வரும் 30ஆம் தேதியுடன் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, இந்தத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 19-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
10th public exam answer sheet valuation start today