10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை...! வாலிபர் போக்சோவில் கைது...! - திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் துறை அதிரடி...!
10th grade student harassed Youth arrested under POCSO Thiruvallur All Women Police Department takes action
திருவள்ளூர் அருகே 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 24 வயது வாலிபரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற 24 வயது வாலிபர், அந்த மாணவிக்கு நீண்ட நாட்களாக பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.மாணவி தெரிவித்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட காவலர்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே, காவலர்களிடம் சிக்காமல் தலைமறைவாக முயன்ற சிலம்பரசனை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர் அவரை காவலர்கள் விரைந்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிலம்பரசனை காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்த காவலர்களின் நடவடிக்கை அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
10th grade student harassed Youth arrested under POCSO Thiruvallur All Women Police Department takes action