பாம்பு கடிக்கு நாகதோஷப் பரிகாரமா...? அவையில் சிரிப்பலையை ஏற்படுத்திய ஓ.பன்னீர்செல்வம்...! - அமைச்சரின் நக்கல் பதில்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் பாம்பு கடி தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், “தோஷம், பில்லி சூனியம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை; ஜலதோஷம்தான் அதிகமாக இருக்கிறது. பாம்பு கடி தோஷம் இருப்பதாக கேள்விப்படவில்லை” என்று கூறியதால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற வினாக்கள் விடை நேரத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.அப்போது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், பாம்பு கடி சம்பவங்கள் தொடர்பாக பேசினார்.

பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக தெரியவருவதாகவும், அந்த பகுதிகளில் ஏதோ ஒரு “தோஷம்” இருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், பேரவைத் தலைவர் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சர் அந்த தொகுதிகளில் “நாகதோஷம்” நீங்குவதற்கான பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் நகைச்சுவையாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு அறிவியல் அடிப்படையிலேயே செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.தோஷம், பில்லி சூனியம் உள்ளிட்டவற்றில் அரசுக்கு நம்பிக்கை இல்லை என்றும், உறுப்பினருக்கு அதில் நம்பிக்கை இருந்தால் தனது தொகுதியில் வேண்டுமானால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

மாநில அளவில் அறிவியல் அடிப்படையிலான முயற்சிகளையே அரசு மேற்கொள்ளும் என்று குறிப்பிட்ட அமைச்சர், “ஜலதோஷம்தான் அதிகமாக இருக்கிறது. பாம்பு கடி தோஷம் இருப்பதாக கேள்விப்படவில்லை” என்று பதிலளித்தார்.அமைச்சரின் இந்த பதில் சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.இதையடுத்து மீண்டும் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விரும்பினால் தோஷம் நீங்குவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள உரியவர்களை அனுப்பி வைப்பதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.

அதற்கு அமைச்சர் அருண்ராஜ், “தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை; விருப்பமும் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பெரியார் இயக்கத்தின் கொள்கைகளை முன்னிறுத்தி, தோஷம் போன்ற நம்பிக்கைகளுக்கு மாறாக அறிவியல் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை அறிவியல் பூர்வமாக அணுகக்கூடியவர்கள்” என்ற கருத்தை அவர் பதிவு செய்தார்.இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் உண்மையிலேயே ஜலதோஷத்தை பற்றித்தான் குறிப்பிட்டதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.

தங்கள் துணைத் தலைவருக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவருக்கு உண்மையிலேயே ஜலதோஷம் இருப்பதாகவும் கூறிய உதயநிதி ஸ்டாலின், அதற்கும் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.பாம்பு கடி, நாகதோஷம், ஜலதோஷம் என அடுத்தடுத்து நடைபெற்ற இந்த நகைச்சுவையான விவாதத்தால் தமிழக சட்டசபையில் சிறிது நேரம் கலகலப்பான சூழல் நிலவியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Nagadosh cure for snakebite O Panneerselvam who caused laughter House Minister mocking reply


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->