உணவு சாப்பிடாமல் வாந்தி எடுத்த 1 வயது குழந்தை... எக்ஸ்-ரே பார்த்து அதிர்ந்த பெற்றோர்...! - ஈரோட்டில் நடந்த நெகிழ்ச்சி மருத்துவம்...!
1 year old child vomited without eating Parents shocked after seeing X ray Resilient medical treatment Erode
நாமக்கல் குமாரபாளையத்தில் ஒரு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த இரும்புக் கம்பியால் பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் துரிதமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்தக் கம்பியை பத்திரமாக அகற்றி குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.நாமக்கல் குமாரபாளையத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தை உணவு சாப்பிடாமல், அடிக்கடி வாந்தி எடுத்ததால் பெற்றோர் கவலையடைந்தனர்.இதையடுத்து குழந்தையை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தையின் தொண்டைப் பகுதியில் இரும்புக் கம்பி ஒன்று சிக்கியிருந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மேல்சிகிச்சைக்காக கடந்த மாதம் 24-ந்தேதி குழந்தையை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.குழந்தையை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தொண்டையில் இரும்புக் கம்பி சிக்கியிருப்பதை உறுதி செய்தனர். குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, தாமதமின்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து குழந்தை உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் தீவிரமாக செயல்பட்டு, தொண்டையில் சிக்கியிருந்த இரும்புக் கம்பியை மிகவும் கவனமாக அகற்றினர்.அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு தீவிர மருத்துவக் கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.இதையடுத்து குழந்தை முழுமையாக குணமடைந்த நிலையில், நேற்று முன்தினம் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த இரும்புக் கம்பியை உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி குழந்தையை காப்பாற்றிய ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்களின் நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.
English Summary
1 year old child vomited without eating Parents shocked after seeing X ray Resilient medical treatment Erode