1000 - ஆண்டு பழமை வாய்ந்த ஶ்ரீ கரடி சித்தர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு சித்தர் விழா..ஏராளமான பக்கதர்கள் தரிசனம்!  - Seithipunal
Seithipunal


1000 - ஆண்டு பழமை வாய்ந்த ஶ்ரீ கரடி சித்தர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு சித்தர் விழா..ஏராளமான பக்கதர்கள் தரிசனம்! 


சேலம் மாவட்டம் சேலம் வட்டம் உத்தமசோழபுரத்தில் 1000 - வருடங்களுக்கு மேல் ஸ்ரீ கரடி சித்தர்   ஸ்ரீ கல்யாண கணபதி ஸ்ரீ  சித்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு சித்தர் சிறப்பு விழாவில் அதிகாலையில் ஶ்ரீ கரடி சித்தர்க்கு   மூலிகையால் அபிஷேகங்கள் நடைப்பெற்று மதியம் 1-00 மணிக்கு மேல் பம்பை வாத்தியங்கள் முழங்க ஶ்ரீ கரடி சித்தர்க்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

 ஆன்மீக பக்தர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு கரடி சித்தர் அருளை பெற்று சென்றார் பின்பு கழி இனிப்பு உருண்டை பிரசாதம் வழங்கி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு இரவு 7.00 மணிக்கு பம்பை வாத்தியத்துடன் திருவீதி உலா கரடி சித்தர் திருக்கோவிலிலிருந்து சத்தாபரணம் சத்யம் கார்டன் வழியாக ஶ்ரீ கரபுரநாதர் ஈஸ்வரர் கோவில் சென்று உத்தமசோழபுரம் இராஜவீதி வழியாக மேல் காட்டான் தெருவில் சென்று கோவில் வந்தடையும்  அதன் பிறகு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று பக்தர்கள் தரிசன் செய்தனர் 


ஶ்ரீ கரடி சித்தரின் வரலாறு :

கொங்கு உலாவிய குன்றுரை கரடியே கரியா மிக்கெனக் சொல்லத் தலையினை அசைத்து வெண்கு  மங்கையை திருமணம் செய்திட மறுந்திடில் வழக்கா மங்கு வந்துதான்கரி சொலுமறிவுடையுளியும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் ஸ்ருஷ்டியினாலே 18 சித்தர்களுள் ஒருவர் கரடி சித்தர் அவர் 1000 ஆண்டுகளுக்கு முன்பு உத்தமசோழபுரம் கரபுரநாதர் சிவன் கோவில் பின்பு ஜீவசமாதி ஆனார். ஜீவசமாதியில் கரடி சித்தர் சிலை இருந்தன அந்த காலங்களில் கரடி சித்தர் சிலைகளை கரபுரநாதர் சிவன் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வழிப்பட்டு வந்தன அதன் பின்பு 1996 - ஆம் ஆண்டில் கோவிந்தராஜ் உடன் 10 நபர்கள் அன்பழகன், அப்புசாமி , குமார், சந்திரன்,ராஜீ,முருகேசன்,மணி,செல்வம்,சாமிநாதன், ஶ்ரீகரடி சித்தர் கல்வெட்டுகளையும் ஜீவசமாதி பிரமிடு போல இருந்தன அங்கு ஜவ்வாது துளசி வெற்றி வேர் மூலிகை வேர்கள் வாசம் வந்தன அப்போது அவர்களிடம் இருந்த பணத்தை வைத்து பொதுமக்களிடம் வசூல் செய்து  கோவில் கட்டினார் 1996-ல் ஆரம்பித்தப் பணிகளை 26-ம் ஆண்டு வருடங்களாக தினமும் பூஜை செய்து வருகிறார்கள் ஸ்ரீ கரடி  சித்தர் கோவிலில் பக்தர்கள் மனதில் இருக்கும் துன்பங்களும் சுப காரியங்கள் திருமண தடங்கள்  குழந்தையில்லாதவர்கள்  தொழில் முடக்கம் அனைத்து காரியங்களும் நிறைவேற்றைத் தரும் இந்த ஶ்ரீ கரடி சித்தர்  இதனால் பக்தர்கள் நிறைய பேர் வெளியூரிலிருந்து உத்தமசோழபுரத்தில் இருக்கும் ஶ்ரீ கரடி சித்தர் வேண்டி வணங்கி அருள் பெற்று செல்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1000 years old Sri Karadi Siddhar Temple celebrates 26th year Siddhar Vizha A lot of devotees have darshan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->