சென்னையில் இரவு நேரத்தில் ரேஸ்: 10 இளைஞர்கள் கைது, 09 பைக்குகள் பறிமுதல்..!
10 youths arrested for bike race at night in Chennai 09 bikes seized
சென்னையில் முக்கிய சாலைகளில் இரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுப்பட்டு வருகின்றனர். பைக்கில் அதிவேகமாக செல்லும் இளைஞர்களால் விபத்துகளும் ஏற்படுவதோடு, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இரவு நேரத்தில் ரேஸ் நடப்பது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்து அதை பார்த்து பலரும் ஒன்று கூடி ரேசில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், குறித்த பைக் ரேஸ் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 10 இளைஞர்களை இன்று கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 09 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பைக் ரேசில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள எஞ்சிய இளைஞர்களின் விவரம் குறித்தும் சேகரித்த அண்ணா நகர் போலீசார் அவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
10 youths arrested for bike race at night in Chennai 09 bikes seized