குடும்பத் தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது!
3 people injured in family feud with sword attack 4 arrested
தூத்துக்குடி பூபாண்டியாபுரத்தில் கணவன் மனைவிக்குள் குடும்பத் தகராறு பெரும் சண்டையில் முடித்துள்ளது. சமாதான பேச்சுவார்த்தை நடத்தவந்தபோது 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பூபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்,அ.சண்முகபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் . இந்த தம்பதியர் பூபாண்டியாபுரத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். சந்தோசமாக குடும்பம் நடத்திவந்த கணவன் மனைவிக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடும்ப சண்டையை தீர்த்து வைக்க விஜயலட்சுமியின் உறவினர்களான தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த அந்தோணிஜேசுராஜ், அ.சண்முகபுரத்தை சேர்ந்த குமார், முனியசாமி, ஆறுமுகம் ஆகியோர் வந்துள்ளனர்.அப்போது சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர்கள் கைகலப்பு ஏற்பட்டதுடன் 4 பேரும் சேர்ந்து சரவணனின் தந்தை அழகுமுத்து, மாரீஸ்வரன், மார்க்கண்டேயன்மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெடியுள்ளனர் . இதில் பலத்த காயம் அடைந்த மார்க்கண்டேயன் உட்பட 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியது.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அந்தோணி ஜேசுராஜ், முனியசாமி, குமார், ஆறுமுகம் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
3 people injured in family feud with sword attack 4 arrested