வேட்பாளர் தேர்வு: நாளை கூடுகிறது பா.ஜ.க. நாடாளுமன்ற வாரியம் !
Candidate selectionThe BJP parliamentary committee meets tomorrow
துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, பா.ஜ.க. நாடாளுமன்ற வாரிய கூட்டம் நாளை கூடுகிறது.ஆளும் கூட்டணிக்கான துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது,
சமீபத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினமா செய்த நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனையடுத்து துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. எனினும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பிலும் வேட்பாளரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த, பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஐக்கிய ஜனதா தளம் சிவசேனா, தெலுங்கு தேசம் மற்றும் எல்.ஜே.பி. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்,ஆளும் கூட்டணிக்கான துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிகாரம் அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, பா.ஜ.க. நாடாளுமன்ற வாரிய கூட்டம் நாளை கூடுகிறது.
English Summary
Candidate selectionThe BJP parliamentary committee meets tomorrow