திரு.நெப்போலியன் போனபார்ட் அவர்கள் பிறந்ததினம்!.
Mr Napoleon Bonapartes birthday
முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது என்ற தாரக மந்திரத்திற்குரியவர்திரு.நெப்போலியன் போனபார்ட் அவர்கள் பிறந்ததினம்!.
பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் 1769ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரான்ஸின் கார்சிகா தீவில் உள்ள அஜாஸியோ நகரில் பிறந்தார்.
இவர் போர் வீரருக்கான பயிற்சியை முடித்து, 2-ம் நிலை லெப்டினன்டாக 1785-ல் பதவி ஏற்றார். 1796-ல் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். இத்தாலியில் ஆஸ்திரிய படைகளை முறியடித்து புகழ்பெற்றார். பிரெஞ்சு மக்களின் பேராதரவுடன் 1804-ல் 35-வது வயதில் பிரான்ஸ் மன்னராக முடிசூட்டிக்கொண்டார்.
போர்களில் வெற்றியைக் குவித்தார். தேச நிர்வாகத்துக்கான புதிய சட்டங்களை உருவாக்கினார். இவை கோட் ஆஃப் நெப்போலியன் எனப்படுகின்றன. முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது என்ற தாரக மந்திரத்திற்குரியவரான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 52வது வயதில் 1821ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி மறைந்தார்.

வரலாற்று ஆய்வுலகின் பிதாமகன்' திரு.தி.வை.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் பிறந்ததினம்!.
தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (T. V. Sadasiva Pandarathar, ஆகஸ்ட் 15, 1892 - ஜனவரி 2, 1960) சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் தமிழில் எழுதியவர்.
சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார்.
1942-1953, 1953-60 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்கால சோழர் சரித்தரம்” என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, 51 மற்றும் 61 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.
English Summary
Mr Napoleon Bonapartes birthday