வெளியே சொன்னால் உன்னையும் உன் அம்மாவையும் கொலை செய்துவிடுவேன்...! - சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
10 years prison young man who tricked harassement girl
விழுப்புரம் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி 24 வயதான வீரமணி , இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த கொடூரச் சம்பவத்தில் சிக்கியுள்ளார். திருமணம் செய்வேன் என்ற மாயவாக்குறுதியால் 18 வயது சிறுமியை ஏமாற்றி, தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த அவர், 06.03.2023 அன்று அருவருப்பான குற்றத்தை நிகழ்த்தினார்.

அன்று, இயற்கை தேவைக்காக அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு சென்றிருந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்ற வீரமணி, திடீரென “நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று நம்பிக்கை கொடுத்து, அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மனஉளைச்சலுடன் இருந்த சிறுமி, அவரை திருமணம் செய்ய வலியுறுத்தியபோதும், வீரமணி அதனை நிராகரித்து, இந்த விஷயம் வெளியில் சென்றால் உன்னையும், உன் தாயையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தைரியமாக புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து காவலர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து, வீரமணியை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பின் சாட்சிகள் முழுமையாக விசாரிக்கப்பட்ட பிறகு, நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
மேலும், வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் வீரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
10 years prison young man who tricked harassement girl