ஆம்புலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை - தமிழக அரசு அதிரடி.!!
10 years jail to attack ambulance and drivers
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்று திருச்சி மாவட்டம் துறையூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது திடீரென்று 108 ஆம்புலன்ஸ் ஒன்று அந்த வழியாக வந்தது. இதைபார்த்த அதிமுக தொண்டர்கள் அந்த வாகனத்தை மறித்து, கையால் தட்டி பின்பக்க கதவை திறந்து நோயாளிகள் யாரேனும் உள்ளனரா? என்று பார்த்தனர். ஆனால் நோயாளி இல்லாததால், ஆம்புலன்சை முற்றுகையிட்டு ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வேறு திசையில் செல்லும்படி அறிவுறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கிறது என்று நினைக்க வேண்டாம். அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது. 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
10 years jail to attack ambulance and drivers