பயணிகளின் கனிவான கவனத்திற்கு! பராமரிப்பு பணி காரணமாக கோவை செல்லும் 10 ரயில்கள் ரத்து! - Seithipunal
Seithipunal


சென்னை - கோவை இடையே திருப்பூர் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்டை ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "வரும் டிசம்பர் 3ம் தேதி சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக திருப்பூர் வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

குறிப்பாக கோவை - சென்னை சென்ட்ரல் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 3ம் தேதி காலை 06:15 மணிக்கு கோவையிலிருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மூன்றாம் தேதி மதியம் 02:30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவதும் ரத்து செய்யப்படுகிறது.

 சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் 3ம் தேதி காலை 10:00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று கோவை - சென்னை சென்ட்ரல் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் 3ம் தேதி மதியம் 03:15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவதும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 3ம் தேதி காலை 07:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.  அதேபோன்று கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 3ம் தேதி மதியம் 03:05 மணிக்கு கோவையிலிருந்து புறப்படுவதும் ரத்து செய்யப்படுகிறது.

கோவை - கே.ஆர்.எஸ் பெங்களூர் செல்லும் உதய எக்ஸ்பிரஸ் ரயில் 3ம் தேதி காலை 05:45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று கே.ஆர்.எஸ் பெங்களூரு - கோவை செல்லும் உதய எக்ஸ்பிரஸ் ரயில் 3ம் தேதி மதியம் 02:15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

கே.ஆர்.எஸ் பெங்களூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் 3ம் தேதி காலை 06:10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று எர்ணாகுளம் - கே.ஆர்.எஸ் பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 3ம் தேதி காலை 09:00 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படுவதும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 trains to Coimbatore canceled due to maintenance work


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->