'எஸ்.ஐ.ஆர்., பணியால் ஓட்டுகள் குறைய வாய்ப்பே இல்லை; இறந்தவர்கள் ஓட்டுகள் மட்டுமே நீக்கப்படுகிறது': காங்கிரஸ் எம்.பி., கார்த்தி கருத்து..!
Congress MP Karthi says that only the votes of those who died due to SIR work are being removed
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும், ஆனால், இந்த பணிகளை முன்னதாகவே ஆரம்பித்து இருந்தால், ஊழியர்களுக்கு பணிச்சுமை இருந்திருக்காது என்று காங்கிரஸ் எம்.பி., கார்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், எஸ்.ஐ.ஆர்., பணிகளில், இறந்தவர்கள் ஓட்டு மட்டுமே நீக்கப்படுகிறது என்று அவர் சிவகங்கையில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றி கழகத்தை குறைத்து மதிப்பிட முடியாது எனவும், மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் த.வெ.க., சென்றது அந்த கட்சிக்கு பலம்; ஆனால், அ.தி.மு.க.,விற்கு பலவீனம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் தெரிவித்துள்ளதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், இந்த பணிகளை முன்னதாகவே ஆரம்பித்து இருந்தால், ஊழியர்களுக்கு பணிச்சுமை இருந்திருக்காது என்றும் பேசியுள்ளார்.

அத்துடன் எஸ்.ஐ.ஆர். பணியால் ஓட்டுகள் குறைய வாய்ப்பே இல்லை. இறந்தவர்கள் ஓட்டுகள் மட்டுமே நீக்கப்படுகிறது என்றும், இந்த விஷயத்தில், என் கருத்து, தி.மு.க.,விற்கு எதிரான கருத்து இல்லை. இது சிந்தித்து கூறக்கூடிய கருத்து என்றும் கூறியுள்ளார்.
மேலும், தமிழக சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி வலுவாகவே உள்ளது என்றும், தமிழக மக்கள் பா.ஜ.,வை முழுமையாக ஏற்கவில்லை. இந்த தேர்தலிலும் பா.ஜ.,விற்கு வரவேற்பு இருக்காது என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை என கார்த்தி கூறிய கருத்தால், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Congress MP Karthi says that only the votes of those who died due to SIR work are being removed