1-ஆம்வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை10% இடஒதுக்கீடு.. சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் 10% இடஒதுக்கீட்டில் 1-ஆம்வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதில் காலியாக இருக்கும் இடங்களை 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வப்புவரை  அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கும் படி ஆணை பிறப்பிக்க வேண்டும் என  புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி தெரிவிக்கையில்:15-5-2025 அன்று புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம்  வைத்த   கோரிக்கை ஏற்று  அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து  படிப்புகளிலும்  10% சிறப்பு  தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும்   என்று அறிவித்த முதலமைச்சர் அவர்களுக்கும், கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் 10% இடஒதுக்கீட்டில் 1-ஆம்வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதில்  காலியாக இருக்கும் இடங்களை 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வப்புவரை படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் படி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோரை அரசுப்பள்ளி மாணவர்கள் நலன் கருதி  கேட்டுக்கொள்கின்றோம்.

பெற்றோர்கள் தங்களின்  அறியாமையின் காரணமாக 1- ஆம்  வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை ஆர்வக்கோளாறினால் தனியார்  பள்ளிகளில் படிக்க வைத்து விடுகிறார்கள், வறுமையின் காரணமாக கல்வி கட்டணம் கட்டமுடியாத காரணத்தால் 6-ஆம்  வகுப்புலிருந்து  அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் ஆகவே அவர்களின் வறுமை நிலையை அறிந்து புதுச்சேரி அரசு1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புகள் வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதில் காலியாக இருக்கும் மீதம் உள்ள இடங்களை அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  அளிக்க வேண்டும் அதை  ஆணையாக இந்த இந்த ஆண்டே( 2025-26 ) பிறப்பித்து மாணவர்கள் சேர்க்கையை நடத்த  வேண்டும்,, அப்படி மாணவர் சேர்க்கை நடத்தினால்  அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் நிலை உருவாகும், இல்லை என்றால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகாரித்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து  பள்ளிகள் மூடும் நிலை உருவாகும். ஆகவே மாணவர்கள் நலன் கருதி ஆளுநர், முதலமைச்சர்,கல்வித்துறை அமைச்சர், தலைமை செயலர் ஆகியோருக்கு கோரிக்கை  வைக்கின்றோம் என புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி,கோரிக்கைவிடுத்துள்ளார். 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10% reservation from 1st grade to 12th gradeDemand from the Sentak student parent welfare association


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->