இளைஞர்களுக்கான உச்சி மாநாடு நிறைவு விழா.! காணொளி மூலம் கலந்துகொண்ட பி. வி. சிந்து.! - Seithipunal
Seithipunal


உலகின் மிகச்சிறந்த பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவராக இந்தியாவின் பி.வி.சிந்து திகழ்கிறார். 27 வயதான இவர் நிறைய பதக்கங்களை குவித்துள்ளார்.

இவர் இதுவரை ஒலிம்பிக்கில் 2 பதக்கமும், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் உள்பட 5 பதக்கமும் வென்று சாதனை செய்திருக்கிறார்  . 

அண்மையில் நடந்த காமன்வெல்த் விளையாட்டிலும் இவர் மகுடம் சூடினார். அவர் களத்தில்  இறங்கும் போதெல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு  அதிகரிக்கும். மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் தான் ஆடுவார்.

இந்நிலையில், காணொளி மூலம்  இளைஞர்களுக்கான உச்சிமாநாடு நிறைவு விழாவில் கலந்து கொண்ட இவர்  நெருக்கடியை திறம்பட கையாள்வது குறித்து பேசினார். 

அவர் பேசுகையில், 'நீண்ட காலமாக நான் தியானம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். இதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைப்பதாக எப்போதும் நான் உணர்கிறேன். நெருக்கடியில் இருந்து மீள தியானம் எனக்கு உதவுகிறது. இளைஞர்களும் தியானம் செய்வதை ஒரு போதும் மறந்து விடக்கூடாது' என்றார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth summit closing ceremony Participating B V sindhu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->