காங்கிரஸ் கையில் உயர்கல்வித் துறையா...? தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து நயினார் நாகேந்திரன் பகீர் கேள்வி...! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தமிழக உயர்கல்வித் துறையின் தற்போதைய நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து கல்லூரி சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசின் கீழ் செயல்படும் 181 அரசு கலைக் கல்லூரிகளில் 43 சதவீத இடங்கள் இன்னும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

அரசு நிர்ணயித்த காலஅளவுப்படி, ஜூன் 18-ஆம் தேதிக்குள் அரசு கலைக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நிறைவடைய வேண்டியிருந்தது. ஆனால் மாணவர் சேர்க்கை மந்தமாக இருந்ததால் கலந்தாய்வு காலம் நீட்டிக்கப்பட்டும் கூட, பாதி இடங்களே நிரம்பியிருப்பது உயர்கல்வித் துறையின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயிரக்கணக்கான கட்டணச் செலவை ஏற்றுக்கொண்டே மக்கள் அரசு கல்லூரிகளைத் தவிர்த்து தனியார் கல்லூரிகளை நாடுவது, ஆளும் அரசின் கல்வி நிர்வாகத் தோல்விக்கான தெளிவான சான்று என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படும் அரசு கல்லூரிகளை உடனடியாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், அதற்குப் பதிலாக பொது இடங்களில் வேறு நிகழ்வுகளில் கவனம் செலுத்துவது துறையின் செயல்திறனை கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பல சவால்களை சந்தித்து வரும் தமிழக உயர்கல்வித் துறையை மேலும் திறம்பட வழிநடத்த வேண்டிய பொறுப்பு அரசிடம் இருப்பதாகவும், முதல்-அமைச்சர் விஜய் அமைச்சர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில், மாணவர்களின் எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

higher education department hands Congress Nayinar Nagendran Bagir questions future Tamil Nadu students


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->