2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய இளம் வீரர் விக்னேஷ் புத்தூர்; உள்ளே வந்த ரகு சர்மா..!
Young player Vignesh Puttur left the 2025 IPL series Raghu Sharma came in
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் பலர் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேரள இளம் வீரரான விக்னேஷ் புத்தூர் இந்த ஆண்டு அறிமுகமானார். இவரது சிறப்பான பந்துவீச்சின் மூலம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளவர்.
சென்னை அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியிலேயே முக்கிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். நடப்பு தொடரில் 05 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 05 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும் அவரது பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இனிவரும் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் இந்திய அணியிலும் இடம்பெற வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டு வந்தது.
ஆனால், இவை அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, விக்னேஷ் புத்தூருக்கு தாடை பகுதியில் எலும்பு அழுத்த முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த எஞ்சியுள்ள 2025 ஐ.பி.எல் தொடருக்கான மும்பை அணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளார்.

அவருக்கு பதிலாக ரகு சர்மா என்கிற உள்நாட்டு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கருதப்பட்ட விக்னேஷ் புத்தூர் பாதியிலேயே இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் சோகம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக மும்பை அணியில் இடம் பிடித்துள்ள ரகு சர்மா பஞ்சாப் மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக 11 முதல்தர போட்டிகளிலும், 09 லிஸ்ட் ஏ போட்டியிலும், 03 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். விஜய் ஹசாரே தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன்காரணமாக மும்பை அணி அவரை அணிக்குள் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Young player Vignesh Puttur left the 2025 IPL series Raghu Sharma came in