மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி! தென் ஆப்பிரிக்காவிற்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.! - Seithipunal
Seithipunal


மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 275 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது இந்தியா பாகிஸ்தான் இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன இன்று இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

கிறிஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஸ்மிருதி மந்தனா 71 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்களும், ஷெபாலி வர்மா 53 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 48 ரன்களும் எடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் கேப்டன் மிதாலி ராஜ் அரைசதம் அடித்ததன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீராங்கனை மற்றும் மிக அதிக வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இஸ்மாயில் மற்றும் கிளாஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.

275 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாபிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World cup women cricket India south Africa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->