தசைப்பிடிப்பு காரணமாக நியூசிலாந்து டி20 அணியில் இருந்து விலகிய பிரேஸ்வெல்; மாற்று வீரர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்தியா -நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மோதி வருகிறது. முநடந்து முடிந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடர் நாளை நாக்பூரில் தொடங்குகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல், டி20 தொடரில் தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்தூரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளது. இவருக்கு மாற்று வீரராக கிறிஸ்டியன் கிளார்க், இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சர்வதேச போட்டியில் இவர் அறிமுகமானார். இந்த தொடரில் இருமுறை தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் 07 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நியூசிலாந்தின் வெற்றிக்கு பேட்டிங்கிலும் அவர் முக்கிய பங்கை வகித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

With Bracewell withdrawing from the New Zealand T20 squad a replacement player has been announced


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->