2047-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 350 விமான நிலையங்கள்; மத்திய அரசு இலக்கு ; ராம் மோகன் நாயுடு..!
Ram Mohan Naidu says the central government aims to build 350 airports across the country by the year 2047
உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் , சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:
'விக்சித் பாரத்' என்ற நீண்டகால தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 350 விமான நிலையங்களைக் கட்ட மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது என்று அறிவித்துள்ளார். மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன நிலையில், 164 விமான நிலையங்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அடுத்த 05 ஆண்டுகளில் குறைந்தது 50 விமான நிலையங்கள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு என்று தெரிவித்துள்ள, அமைச்சர் ராம் மோகன் நாயுடு, கடந்த 11 ஆண்டுகளில், பெரிய நகரங்களில் மட்டுமின்றி நாட்டின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் 88 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் 2047 'விக்சித் பாரத்' இலக்கை அடைய விமானப் போக்குவரத்து மிக முக்கியமான துறையாகும் என்றும், நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சித் துறை சிவில் விமானப் போக்குவரத்து என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிவில் விமானப் போக்குவரத்தில் மாநிலங்களை வலுப்படுத்த விரும்புகிறதாகவும், வரும் நாட்களில் மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்கவுள்ளதாகவும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Ram Mohan Naidu says the central government aims to build 350 airports across the country by the year 2047