இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்; ஐரோப்பிய ஆணைய தலைவர் பேச்சு..!
The European Commission president stated that the trade agreement with India is historic
உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஆணைய தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் கலந்துகொண்டு பேசியதாவது:
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இன்னும் சில பணிகள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விளிம்பில் உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இதை அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என அழைக்கிறார்கள் என்றும், இது 200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்றும், இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்குக்குச் சமம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்தும் எனவும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தினவிழா ஐனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதில், சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணைய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதன் போது இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
The European Commission president stated that the trade agreement with India is historic