காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு: செல்வப்பெருந்தகை அறிவிப்பு..!
Selvaperunthagai announces extension of the deadline for filing nomination papers
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 15.12.2025 வரை பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
''2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 15.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை ஐந்தாயிரத்து நானூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை உற்சாகத்துடன் அளித்துள்ளனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, வருகிற (30.1.2026) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

English Summary
Selvaperunthagai announces extension of the deadline for filing nomination papers