தோனி இந்த சீசன் விளையாடமாட்டரா? தோனிக்கு ஏற்பட்ட காயம் குறித்த உண்மையை உடைத்து பேசிய ஸ்டீபன் பிளமிங்! - Seithipunal
Seithipunal


ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்று, புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதனால் இனிவரும் போட்டிகள் அனைத்தும் சென்னை அணிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளன.

பிளேஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டுமெனில் மீதமுள்ள போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. இந்த சூழலில் ரசிகர்களின் கவனம் முழுவதும் மகேந்திர சிங் தோனியின் மீள்வரவில்தான் உள்ளது.

தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்கள் தோனி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொடர் பாதியை கடந்தும் அவர் இன்னும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவில்லை.

இதனால் இந்த சீசனில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்துள்ள தகவல், தோனியின் மீள்வரவைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய பிளமிங்,
“தோனி மீண்டும் களமிறங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் எளிதானது அல்ல. முழுமையாக குணமடைவதற்கு முன் அவரை களமிறக்கினால் நிலைமை மோசமாகும் அபாயம் உள்ளது,” என்றார்.

மேலும், “பயிற்சியை மீண்டும் தொடங்கியபோது அவருக்கு மீண்டும் ஒரு சிறிய காயம் ஏற்பட்டது. அது மீள்வரவை மேலும் தாமதப்படுத்தியுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட களத்துக்கு திரும்ப அதிக நேரம் ஆகிறது,” என்றும் தெரிவித்தார்.

இந்த தகவல்கள் காரணமாக, தோனி இந்த சீசனையே முழுவதுமாக தவறவிடக்கூடும் என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

சிஎஸ்கேவின் அனுபவமும், கடைசி கட்ட அழுத்தத்தை சமாளிக்கும் திறனும் தோனியுடன் அதிகமாக இணைக்கப்பட்டிருப்பதால், அவரது இல்லாமை அணியின் சமநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் போட்டிகளில் சென்னை அணி எப்படி மீண்டு வரப்போகிறது, தோனி எப்போது திரும்புவார் என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Dhoni not play this season Stephen Fleming breaks the truth about Dhoni injury


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->