கோப்பையை தூக்கிய ரஹானே! வீழ்ந்த அணியை தூக்கி நிறுத்தி சாம்பியனான சம்பவம்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஒன்றான துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் தெற்கு மண்டலத்தை வீழ்த்தி மேற்கு மண்டல அணி சேம்பியன் கோப்பையை தட்டி சென்றுள்ளது.

முதலில் ஆட்டத்தை தொடங்கிய மேற்கு மண்டல அணி 270 ரண்களுக்கு தனது முதல் இன்னிசை இழந்தது. முன்னணி வீரர்களான ஜெய்ஸ்வால், பஞ்சால், ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் அயர்  37 சர்பராஸ் கான் 34 ரன்கள் என ஓரளவு கைகொடுக்க, ஹெட் படேல் மட்டும் நிலைத்து நின்று ஆடி 98 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் ஜெயதேவ் உனட்கட் 47 ரன்களை குவிக்க 270 என்ற கவுரமான இலக்கை அடைய முடிந்தது. மிகச் சிறப்பாக பந்துவீசிய தெற்கு மண்டல அணி தரப்பில், தமிழகத்தின் சாய்கிஷோர் 5 விக்கெட்டுகளையும், பசில் தம்பி, ஸ்டீபன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

பின்னர் தனது பேட்டிங் தொடங்கிய தெற்கு மண்டல அணிக்கு, அந்த அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரரான பாபா இந்திரஜித் மட்டுமே கை கொடுக்க, மற்றவர்கள் சொதப்ப 327 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 118 ரன்கள் குவித்து இருந்தார். மனிஷ் பாண்டே 48 ரவி தேஜா 34 கௌதம் 43 ஓரளவுக்கு கைகொடுக்கவே 57 ரன்கள் முன்னிலை பெற்றனர். மேற்கு மண்டல அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உனட்கட் 4 விக்கெட்டுகளையும், சிந்தன் காஜா 2 விக்கெட்டுகளையும், சேத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

57 ரன்கள் பின்தங்கி இருந்த மேற்கு மண்டல அணி தனது இரண்டாவது இன்னிசை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய நட்சத்திர பட்டாளம் அடங்கிய மேற்கு மண்டல அணி, இரண்டாவது இன்னிங்சில் களத்தினை கெட்டியாக பிடித்துக்கொண்டது. அவர்களை களத்தில் ஒட்டிவைத்தது போல் நிலைத்து நின்று ஆடினார்கள். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நங்கூரம் போல களத்தில் நின்றுவிட்டார். மறுமுனையில் ஆடிக் கொண்டிருந்த பிரியங் பஞ்சால் 40 ரன்களிலும், கேப்டன் அஜின்கியா ரகானே 15 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறிக் கொண்டிருக்க, மறுபுறம் நங்கூரமாக நின்று கொண்டிருந்த  ஜெய்ஸ்வால் 323 பந்துகளில் 30 பவுண்டரி நான்கு சிக்ஸர்களுடன் 265 ரன்கள் குவித்து நான்காவது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். 

அதன் பின்னரும் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ள முன்வராத மேற்கு மண்டல அணி,  சர்ப்ராஸ்கான் மற்றும் ஹெட் படேல்  இருவரின் அதிரடியையும் தொடர வைத்தது. இறுதியாக சர்ப்ராஸ்கான் 127 ரன்களும் ஹிட் பட்டேல் 51 ரன்களும் அடித்த பொழுது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. மேற்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெடுகளை இழந்து 585 ரன்கள் குவித்தது. தெற்கு மண்டல அணிக்கு 529 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கபட்டு இருந்தது. 

முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய தெற்கு மண்டல அணிக்கு, அந்த அணியின் ஸ்டீபன் காயம் அடைந்து வெளியேற மிகப்பெரிய பின்னடைவாகவும் இருந்தது. களத்தில் மிகவும் சோர்ந்து போன தெற்கு மண்டல அணி வீரர்கள் எப்போது ஆட்டம் முடியும், களத்தை விட்டு வெளியே செல்லலாம் என்பது போல உடல்மொழிகளை வெளிப்படுத்தி, வளைந்து நெளிந்து கொண்டிருந்தனர். நான்கு விக்கெட்டுகளில் சாய்கிஷோர், கௌதம் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். 

வெற்றி இலக்காக 529 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தெற்கு மண்டல அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கேரளாவை சேர்ந்த ரோகன் கண்ணும்மாலை தவிர்த்து மற்ற யாரும் சோபிக்கவில்லை. அவர் மட்டுமே ஒருபுறம் நிலைத்து நின்று ஆட, மறுபுறம் நட்சத்திர வீரர்கள் பாண்டே, அகர்வால், விஹாரி என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஆட்டத்தை கோட்டை விட்டனர். கண்ணும்மாலும் 93 ரண்களுக்கு ஆட்டம் இழந்தார். இறுதியாக ரவி தேஜா மட்டும் சற்று நேரம் போராடி பார்க்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இருந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர். இதன் மூலம் மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. 

மேற்கு மண்டல அணி தரப்பில் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த ஜெயதேவ் உனட்கட் இரண்டாவது இன்னிங்ஸிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரே தொடரின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். 265 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 57 ரன்கள் முன்னிலை பெற்றாலும் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசாததன் காரணமாக 294 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் தெற்கு மண்டல அணி தோல்வியை சந்தித்துள்ளது. மேற்கு மண்டல அணியின் கேப்டனான அஜின்கியா ரஹானே கோப்பையை பெற்று இளம் வீரரான சர்பராஸ் கானிடம் ஒப்படைத்தார். மேற்கு மண்டல அணியில் வீரர்கள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West zone beat south zone in duleep trophy final


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->