இந்தியா பேட்டிங்! அணித்தேர்வில் அதிர்ச்சி அளித்த கோலி!   - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ள இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது பற்றி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த அணியை பொறுத்தவரையில் மண்ணின் மைந்தரான சஞ்சு சாம்சன் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடமளிக்காமல் கடந்த போட்டு விளையாடிய அதே அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கேரளா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். 

மேற்கு இந்திய தீவுகள் அணியில் தினேஷ் ராம்தின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பந்தை சேதப்படுத்தியதால், நான்கு போட்டிகளில் தடைகளில் இருந்து வந்த நிக்கோலஸ் பூரன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். 

இந்தியா (விளையாடும் லெவன்): ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் , சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல்

மேற்கிந்திய தீவுகள் (விளையாடும் லெவன்): லென்ட்ல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், கீரோன் பொல்லார்ட் , ஜேசன் ஹோல்டர், கேரி பியர், ஹேடன் வால்ஷ், ஷெல்டன் கோட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west indies won the toss and elected bowl first


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..




கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..




Seithipunal