வரலாறு படைத்தார் திரௌபதி முர்மு...! - நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி பயணம்...!
Droupadi Murmu made history President travels submarine
ஜனாதிபதி திரௌபதி முர்மு, கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் நான்கு நாள் அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இன்று கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து, நீர்மூழ்கிக் கப்பலில் கடலில் பயணம் செய்து வரலாற்றுச் சாதனை ஒன்றை பதிவு செய்தார்.

இந்த சிறப்பு பயணம், கல்வாரி வகையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். வாக்ஷீர் (INS Vagsheer) என்ற அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்றது. நாட்டின் முப்படைகளின் உச்ச தலைவராக உள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்தப் பயணத்தில் நேரடியாக பங்கேற்று கடற்படையின் செயல்திறனைப் பார்வையிட்டார்.
இந்த பயணத்தின் போது, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி அவர்களும் ஜனாதிபதியுடன் இணைந்து பயணம் செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாவது இந்திய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு, இந்திய கடற்படையின் வலிமையையும், பாதுகாப்புத் துறையின் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Droupadi Murmu made history President travels submarine