கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரசியல் சப்தம்...! ‘ஜனநாயகன்’ மேடையில் விஜய்...!
Amidst restrictions political noise Vijay Democrat stage
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றதால், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மலேசிய அதிகாரிகள் கடும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர்.
குறிப்பாக, அரசியல் கருத்துகள் பேசக் கூடாது, த.வெ.க. கொடிகள் எடுத்து வரக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனை மீறி சிலர் த.வெ.க. கொடியை காட்டியதால், அவர்கள் மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தனை கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு மேடையில் நடிகர் விஜய் நேரடியாக இல்லாவிட்டாலும், ஆழ்ந்த அரசியல் உள் அர்த்தம் கொண்ட உரையை நிகழ்த்தினார். அவர் பேசுகையில்,“என் ரசிகர்கள் ஒரு நாள், இரண்டு நாள் என்னோடு இல்லை.
கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக என்னோடு துணையாக நிற்கிறார்கள். அதனால், அடுத்த 30–33 ஆண்டுகளுக்கும் அவர்களோடு நான் நிற்க முடிவு செய்திருக்கிறேன். எனக்கு பிரச்சனை வந்தால் ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து நிற்பார்கள். இனி அவர்களுக்கான நேரம் வந்துவிட்டது; நாளை அவர்கள் வீட்டு வாசலில் நான் நிற்கப் போகிறேன்.
எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே தியாகம் செய்திருக்கிறேன்” என்றார்.தொடர்ந்து அவர்,“விஜய் சும்மா நன்றி சொல்லி போகும் மனிதன் கிடையாது.
நன்றிக்கடனை தீர்த்துவிட்டுத்தான் போவேன். வாழ்க்கையில் வெற்றி பெற நண்பர்கள் அவசியமில்லை; ஆனால் ஒரு வலிமையான எதிராளி அவசியம். அத்தகைய எதிராளி இருந்தால்தான் நீங்களும் வலிமை பெறுவீர்கள்” என குறிப்பிட்டார்.
மேலும்,“விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரா என்று கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக வந்தோம்? 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்திருக்கிறோம். இப்போதும் சிலருக்கு விளக்கம் போதாது.
ஆனாலும், சஸ்பென்ஸில்தான் உண்மையான ‘கிக்’ இருக்கும். 2026-ல் வரலாறு மீண்டும் எழுதப்பட இருக்கிறது. மக்களுக்காக அந்த தருணத்தை வரவேற்க நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று உரையாற்றினார்.இந்த உரை, ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Amidst restrictions political noise Vijay Democrat stage