“நட்பு காரணமாக நடித்தேன்; பணத்திற்காக அல்ல” – ஆனா எங்க படங்களில் யாரும் நடிக்க வருவதில்லை - கிச்சா சுதீப் ஆதங்கம் - Seithipunal
Seithipunal


கிச்சா சுதீப் நடித்துள்ள ‘மார்க்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில், கன்னட நடிகர்கள் பிற மொழிப் படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடிப்பது குறித்து பேசினார். அதே நேரத்தில், பிற மொழி நடிகர்கள் கன்னடப் படங்களில் அத்தகைய சிறப்புத் தோற்றங்களில் நடிக்க முன்வருவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேட்டியில் கிச்சா சுதீப் கூறியதாவது, “நாங்கள் கன்னட நடிகர்கள் பிற மொழிகளில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்கிறோம். ஆனால் பிற மொழி நடிகர்கள் கன்னடப் படங்களில் அப்படிப் பங்கேற்பதில்லை. ஏன் என்று தெரியவில்லை. நான் தனிப்பட்ட முறையில்கூட சில கலைஞர்களிடம் கேட்டேன். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. சிறப்புத் தோற்றங்களில் நடிப்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டும்” என்றார்.

இதற்காக அவர் சில உதாரணங்களையும் முன்வைத்தார். சமீபத்தில் நடிகர் சிவராஜ்குமார், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததை குறிப்பிட்டார். அதேபோல், உபேந்திரா, துனியா விஜய் உள்ளிட்ட பல கன்னட நடிகர்கள் பிற மாநிலப் படங்களில் நடித்துள்ளார்கள். ஆனால், அந்த மாநிலங்களில் இருந்து கன்னட சினிமாவுக்கு யார் வந்து நடித்துள்ளனர்? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

மேலும், தன் பிற மொழி படங்களிலான நடிப்புகள் குறித்து விளக்கமளித்த கிச்சா சுதீப், “நான் பிற மொழிப் படங்களில் நடித்தது பணத்திற்காக அல்ல; நட்புக்காக மட்டுமே. சல்மான் கான் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால், ‘தபாங் 3’ படத்தில் எந்த சம்பளமும் பெறாமல் நடித்தேன். தளபதி விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் யாரையும் பற்றி தவறாக பேசமாட்டார். அதனால் தான் ‘புலி’ படத்தில் நடித்தேன். ‘நான் ஈ’ படத்தின் கதை என்னை மிகவும் பாதித்தது; அதனால் அந்தப் படத்தில் நடித்தேன்” என்று கூறினார்.

மேலும் அவர் இந்திய சினிமாவில் வயது ஒரு தடையல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார். “ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் இந்த வயதிலும் தொடர்ந்து நடிக்கிறார்கள்; அவர்களது படங்களும் வெற்றி பெறுகின்றன. சினிமாவில் சிலரால்தான் வாழ்நாள் முழுவதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடிகிறது. பலர் காலப்போக்கில் காணாமல் போய்விடுகிறார்கள்” என்றார்.

கிச்சா சுதீப்பின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. சிலர் அவரின் நேர்மையை பாராட்டி வருகின்றனர்; மற்றொருபுறம், இது தேவையற்ற சர்ச்சை என விமர்சனங்களும் எழுந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I acted out of friendship not for money But no one comes to act in our films Kiccha Sudeep Aadangam


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->