விஜய்யின் 'ஜனநாயகன்' ரீ-மேக் படமா..? 'ஐயா இது தளபதி படம்; ஹெச்.வினோத் சூப்பர் பதில்..! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின்' ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியா கோலாலம்பூரில் 'புக்கீட் ஜலீல்' ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்து மேடையில் ரேம்ப் செய்தார். அப்போது ரசிகர்களை நோக்கி கை அசைத்த போது அரங்கில் நிறைந்து இருந்த ரசிகர்கள் கூட்டம் 'டிவிகே டிவிகே' என்று ஆர்ப்பரித்தனர். அதற்கு விஜய், 'அது இதற்கான மேடை அல்ல' என்று சைகையில் சொன்ன வீடியோ வற்றாலாகியுள்ளது.

விழாவில் ஜனநாயகன் படத்தின் இயக்குனர் எச்,வினோத பேசுகையில் குறிப்பிட்டதாவது: ஜனநாயகம் முன்னாடி பின்னாடி இருக்குற மாதிரி இருக்கு.. உள்ள புகுந்து அடிச்சிடலாமா அப்படினு நினைக்கிறவங்களுக்கும், நான் சொல்ல விரும்புறது.. ஐயா இது தளபதி படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடைசி 15  நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது, (இது அழுகாச்சியா இருக்காது. அழ வைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை (hope) மட்டும்தான் இருக்கிறது. ஏன் என்றால் தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான்.. என்று ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோசத்தை கொடுத்துள்ளார்.

அத்துடன்,  ஜனநாயகன் ஒரு ரீமேக் படமாக இருக்குமா? எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. இல்லை கொஞ்சம் தான் ரீமேக்கா என்ற குழப்பம் இருக்கிறது.  ஒன்று மட்டும் சொல்கிறேன். இது தளபதி படம். அதனால் உங்கள் மைண்டில் இருக்கும் டவுட் எல்லாத்தையும் அழித்துவிட்டு வாருங்கள். இது 100 சதவீதம் பொழுதுபோக்கான படம். ஆடி பாடி கொண்டாடவும் விஷயம் இருக்கு, அமைதியாக உக்கார்ந்து யோசிக்கவும் விஷயம் இருக்கும் என்று இயக்குனர் எச்.வினோத் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

H Vinoth responds regarding whether Vijays Jananaayagan is a remake film


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->