மலேசியாவில் தளபதி திருவிழா; TVK.. TVK.. என்று தெறிக்கவிட்ட ரசிகர்கள்; விஜய் செய்த மாஸ் சம்பவம்; வீடியோ உள்ளே..!
Fans chanted TVK TVK at the Jananayagan audio launch event
தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் நடிப்புக்கு குட் பை சொல்லியுள்ளார். அவர் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியலில் குதித்துள்ளார்.
இந்த சூழலில் நடிகர் விஜய்யின் இறுதிப்படமான ஹெச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 09-ந்தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே, 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற்று வருகிறது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். கோலாகலமாக தொடங்கிய இசை வெளியிட்டு விழாவில் நடைபெறும் பல சுவாரஸ்சிய சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் விழாவிற்கு ரசிகர்களின் பலத்த கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்த நேரம் அந்த மைதானத்தில் ஒலித்த கரகோஷம் ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பினை பறைசாற்றுகிறது. அதன்பின்னர் நடிகர் விஜய் ஸ்டைலாக ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.
அப்போது மேடையில் விஜய் நின்று கொண்டிருந்த போது ரசிகர்கள் TVK... TVK... என கோஷமிட்டனர். இதனை சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் இது அதற்கான மேடை இல்லை என்பது போல சைகை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Fans chanted TVK TVK at the Jananayagan audio launch event