'விபி-ஜி ராம் ஜி' திட்டத்திற்கு எதிர்ப்பு; மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்; காங்கிரஸ் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (100 நாள் வேலை திட்டம்) காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலாக மத்திய அரசு, 125 நாளாக அதிகரித்து 'விபி-ஜி ராம் ஜி' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

இந்த நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதையும், திட்டத்தில் மாநில அரசின் நிதிச்சுமை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் காட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், 100 நாள் வேலை திட்ட பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக வரும் 05-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி 'விபி-ஜி ராம் ஜி' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது தொடர்பாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் இந்த போராட்டத்தை நடத்த உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Congress has called for a nationwide protest against the VPG Ram Ji scheme


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->