குறைந்த பந்துகளில் அதிவேக சதம்: வரலாற்று சாதனை படைத்துள்ள 'இளம் புயல்' வைபவ் சூர்யவன்ஷி..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு எதிரான, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில் நம் நாட்டின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிவேக சதம் அடித்து மற்றுமொரு சாதனை படைத்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டியில் சூரியவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இதில் வைபவ் சூர்யவன்ஷி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் 48 ரன்னும், 02-வது போட்டியில் 45 ரன்னும் அடித்திருந்தார். 03-வது போட்டியில் 86 ரன்னுக்கு அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 04-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் அதிரடியாக ஆடிய வைபவ் சூரியவன்ஷி 52 பந்துகளில் சதம் அடித்து வைபவ் சாதனை படைத்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த காம்ராம் குலாம் என்ற வீரர் 53 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார். 04-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 09 பவுண்டர்களும், ஒரு சிக்சர் அடங்களாக 78 பந்துகளில் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

03-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் அடித்த இவர், 31 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். இதன்மூலம், அதிவேகமாக அரைசதம் அடித்த 02-வது வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். முதல் இடத்தில் இந்தியாவின் ரிஷப் பன்ட் (18 பந்துகள்) உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைபவ் சூரியவன்ஷி இதற்கு முன்னர், நடந்து முடிந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 14 வயதில் அதிரடியான ஆட்டம் மூலம் பலராலும் பாராட்ட பட்டவர். ராஜஸ்தான் அணிக்காக ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 38 பந்துகளில் 100 ரன்களை அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தமை நினைவில் கொள்ளத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaibhav Suryavanshi creates history by scoring fastest century in fewest balls


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->