எல்லா பக்கமும் அசத்துறாரே..! கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனானார் வைபவ் சூர்யவன்ஷி..!
Vaibhav Suryavanshi becomes vice captain of the East Zone team
இந்தியக் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் இளம் வீரரான 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, வரவிருக்கும் 2026 துலீப் கோப்பை தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்-பேட்டர் ஈஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான சமீபத்திய தொடரில் இஷான் கிஷன் அதிரடியாக ஆடினார். அத்துடன் டி 20 தொடரில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
இந்த அணியில் முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் ஷாபாஸ் அகமது போன்ற அனுபவம் வாய்ந்த முன்னணி இந்திய சர்வதேச வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூத்த இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடந்த ஜிம்பாப்வே தொடரில் 02 அரைசதங்கள் விளாசி அசத்தினார். அத்துடன், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்ததோடு, தொடரின் நாயகனாகவும் தேர்வானார். இறுதிப்போட்டியில் போட்டியின் ஆட்டநாயகனாகவும் திகழ்ந்தார்.
இவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தையும் நிதானத்தையும் கருத்தில் கொண்டு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு அவருக்கு இந்தத் தலைமை வாய்ப்பை அளித்துள்ளது. மிகக் குறைந்த வயதிலேயே இந்தத் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிழக்கு மண்டல அணி விவரம்:
இஷான் கிஷன் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி (துணை கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், சுதீப் குமார் கராமி, ஷாபாஸ் அகமது, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகமது ஷமி, முகேஷ் குமார், குமார் குஷாக்ரா, சிகர் மோகன், அனுகூல் ராய், விராட் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, டேனிஷ் தாஸ் மற்றும் அபிஜித் சர்க்கார்.
English Summary
Vaibhav Suryavanshi becomes vice captain of the East Zone team