சின்னசாமி மைதானத்தில் ஏஐ கேமராக்கள்; கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி பரிந்துரை..! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முக்கிய அணிகளில் ஒன்று. பெங்களூரு அணி, சின்னசாமி மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

கடந்த வருடம் 18 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனைத்தொடர்ந்து, அணியின் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரண்டதில்,  கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த வருடம் 19-வது ஐபி.எல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு சின்னசாமி மைதானம் வழங்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மைதானத்தில் 300 முதல் 350 ஏஐ கேமராக்கள் பொருத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளது. இதற்கான 4.5 கோடி ரூபாய் செலவை, தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த வருடத்தில் நடந்த கூட்டநெரிசலை மனதில் வைத்து, இந்த முறை போட்டியை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்குமா? என்பது கேள்வி குறியாக உள்ளது. ஏஐ கேமராக்கள் மூலம் ரசிகர்கள் ஒரு இடத்தில் அதிகமாக கூட இருப்பதை அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கூட்ட நெரிசலை தடுக்க முடியும் என்பதால் ஆர்சிபி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The RCB team has recommended installing AI cameras at the Chinnaswamy Stadium


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->