U19 உலகக் கோப்பை முதல் அரையிறுதி ஆட்டம்; தாமஸ் ரூ அதிரடியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி..!
The England team defeated Australia in the U19 World Cup match and entered the final
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று புலவாயோவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 07 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டன் தாமஸ் ரூ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அடுத்து காலேப் பல்கனர் 40 ரன்கள் எடுத்தார். 04-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் என அதிரடி காட்டியது.

இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிதேஷ் சாமுவேல் 47 ரன்கள் எடுத்தார். ஆர்யன் ஷர்மா 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அணியின் கேப்டன் ஆலிவர் பீக் நிதானமாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியில், ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 250 ரன்கள் மட்டுமே எடுத்து சகல விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் நாளை ஆப்கானீஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அரையிறுதியில் இரண்டாவது போட்டி மதியம் 01 மணிக்கு ஹராரேயில் நடைபெறவுள்ளது.
English Summary
The England team defeated Australia in the U19 World Cup match and entered the final