டி20 உலகக்கோப்பை : 2வது பயிற்சி போட்டி இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது பயிற்சி போட்டி இன்று நடைபெறுகிறது.

ஐசிசி 8வது டி20 உலக கோப்பை கடந்த அக்டோபர் 16 தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் விளையாடுகின்றன. 

இதில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில், மீதமுள்ள 4 இடங்களுக்கு முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும்,  ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தீவிர வலைப்பயிற்சி மற்றும் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று 2வது பயிற்சி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன்படி, இன்று மதியம் 1.30 மணிக்கு பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் பயிற்சி போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கன்னடம் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பபடுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

T20 World Cup warm up match IND vs NZ today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->