ஆரம்பமே அதிரடி! பறக்கும் சிக்சர்கள்! வெளுத்து வாங்கும் விராட்! சொதப்பிய ரோஹித்! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியியலில் இரண்டாம் உள்ள இந்திய அணி இன்று, வங்காளதேசம் அணியுடன் மோதுகிறது. 

இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்யவே, இந்திய அணி முதலில் களமிறங்கி ஆடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான  ரோஹித் - விராட் கடந்த ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஆடினர். இதில் ரோஹித் சர்மா 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் உடன் இணைந்து கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போதுவரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு, 6 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா அணி விவரம் :

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, 
ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், 
ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, 
ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், 
அர்ஷ்தீப்சிங், பும்ரா, குல்தீப் யாதவ்.

வங்காளதேசம் அணி விவரம்:

தன்ஜித் ஹசன், லிட்டன் தாஸ், 
நஹ்முல் ஹொசைன் ஷான்டோ, 
தவுஹித் ஹ்ருடோய், ஷகிப் அல் ஹசன், 
மகமதுல்லா, ஜாகர் அலி, ரிஷத் ஹொசைன், 
மெஹிதி ஹசன், தன்ஜிம் ஹசன் சாகிப், முஸ்தபிசுர் ரஹ்மான்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup INDvBAN 2024


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->