வீடியோ! இதான்டா கிரிக்கெட்! 3 முறை சூப்பர் ஓவர்! நெதர்லாந்து–நேபாளம் T20 ஆட்டத்தில் சுவாரசியம்!
t20 match Cricket Super Over
டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டி சமமாயின், வெற்றியாளர் தீர்மானிக்க "சூப்பர் ஓவர்" நடைமுறை உள்ளது. ஆனால், நெதர்லாந்து–நேபாளம் அணிகளுக்கிடையிலான போட்டி, இதைவிட வித்தியாசமான நிலைக்கு சென்றது. ஒரே போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள் நடைபெற்றது
டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நெதர்லாந்து அணி முதலில் விளையாடி 7 விக்கெட் இழப்பில் 152 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு நேபாளம் அணியும் 8 விக்கெட் இழப்பில் அதே 152 ரன்கள் அடித்து போட்டி டை ஆனது.
அதையடுத்து நடைபெற்ற முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 19 ரன்கள் எடுத்தன. இரண்டாவது சூப்பர் ஓவரிலும் இரு அணிகள் தலா 17 ரன்கள் எடுத்ததால், மூன்றாவது சூப்பர் ஓவர் கட்டாயமாகியது.
அதில் நேபாளம் முதல் நான்கு பந்துகளுக்குள் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து, முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அதிரடியான வெற்றியை பதிவு செய்தது.
இந்த அபூர்வமான த்ரில்லர், டி20 போட்டிகளில் இதுவரை இல்லாத வரலாற்றுப் பதிவைச் சேர்த்திருக்கிறது.
English Summary
t20 match Cricket Super Over