ஆஸ்திரேலியாவின் அலறவிட்ட பதும் நிசங்க; அபார வெற்றியீட்டிய இலங்கை; சூப்பர் 08 சுற்று வாய்ப்பை தவறவிட்ட ஆஸ்திரேலியா..? - Seithipunal
Seithipunal


10 வது டி20 உலகக் கோப்பை தொடரின் 30வது லீக் போட்டியில், இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது. இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது.  அணியின் மிட்செல் மார்ஷ் (54), டிராவிஸ் ஹெட் (56) ஆகியோரின் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். ஆனால் பவர் பிளேவிற்கு அடுத்ததாக இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் தொடங்கியது.

இந்தியில் ஆஸ்திரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 09 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி, களம் இறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரராக பதும் நிஷாங்க, குசால் பெரேரா ஆகியோர் களம் இறங்கினர். இதில், குசால் பெரேரா 01 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து நிஷாங்க உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பதும் நிசாங்க 32 பந்தில் அரைசதமும், குசால் மெண்டிஸ் 35 பந்தில் அரைசதமும் அடித்தனர். குசால் மெண்டிஸ் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பவன் ரத்னாயக்க  களம் இறங்கினார். 

பதும் நிசாங்கா தனி ஒருவனாக நின்று 52 பந்தில் சதம் விளாசினார். இந்த டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் முதல் சதம் இதுவாகும். இவரது அத்திரி ஆட்டத்தால், இலங்கை 18 ஓவரில் 02 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நிசாங்கா 100 ரன்களுடனும், ரத்னயகே 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று அடுத்த சூப்பர் 08 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு தற்போது மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை வைத்து நிர்ணயிக்கும் நிலை உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lanka beat Australia by 8 wickets


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->