மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65 ஆவது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு இறங்கிய ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 76 ரன்களை எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். ரியம் பிரியம் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

நிக்கோலஸ் பூரன் 22 பந்துகளில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ரமன்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். மும்பை அணி 10 ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக விளையாடினர். இதையடுத்து, ரோஹித் சர்மா 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன்  34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதிரடியாக விளையாடி திம் டேவிட் 18 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SRH vs MI Match SRH Win


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->